அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் மற்றும் அஜித் ஃபான்ஸ்

0
41

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம் என்று பல வார்த்தைகளுக்கு மறு உருவமாக இருப்பவர்தான் தல அஜித். இன்று தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

முக்கியமாக ஒரு மாதமாக திருவிழா போல் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தல அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று ட்விட்டரில் ஆரம்பித்து முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இன்னும் பல இணையதள வழிகளில் #HappyBirthdayThala #HBDThala என்று பல வித ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரசிகர்களை போல் சினிமா துறையிலும் நிறைய பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மோகன் லால், போனி கபூர், தனுஷ், விவேக், அர்ஜுன் விஜய், காஜல் அகர்வால், ஆர்யா, வெங்கட் பிரபு என்று இன்னும் நிறைய பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here