அஜித் தான் வசூலில் முன்னிலை வகிப்பார் என்று ஜாதகம் சொல்லுதாம்

0
143

சினிமாவுக்கும், அரசியலுக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருந்து வருது அப்படிங்கிறது எல்லோருக்கும் தெரியும். எடுத்துக்காட்ட வேண்டுமென்றால் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ஜெயலலிதா என்று பல பிரபலங்களை சொல்லலாம்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இதற்கு அடுத்து தற்போது அரசியலுக்கு வர காத்திருக்கும் நடிகர்கள், தளபதி விஜய் மற்றும் தல அஜித்.

முக்கியமாக தல அஜித் ‘அரசியல் வேண்டாம்’ என்று ஒதுங்கிவிட்டார், இருந்தாலும் ஜாதகப்படி ‘முதல்வர்’ ஆவதற்கு ராசி கட்சிதமாக உள்ளது அஜித்துக்குத்தான் என்றும் இதனால் அதிக வாய்ப்பு ‘தல’ க்கு மட்டும்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மற்றவர்க்கெல்லாம் அரசியலுக்கு வர போராடியாக வேண்டும். ஆனால் அஜித் அசால்ட்டா வருவார் என்றும், இந்த வருஷத்தில் தல அஜித் அரசியல் வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாவும், முக்கியமா பொங்கலுக்கு வர இருக்கிற ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ யுத்தத்தில் அஜித் தான் வசூலில் முன்னிலை வகிப்பார் என்று ஜாதகத்தில் கூறப்படுவதாவும் பிரபல ஜோதிட பெண்மணி டாக்டர். ஞானரதம் ஒரு யு டூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

இது இப்படி இருக்க ‘தளபதி’ விஜய்க்கு ஒரு மாஸ் இருந்து வருகிற நிலையில் விஜயின் முன்னாள் PRO பி.டி .செல்வகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால், எனது கணிப்பின்படி விஜய் தமிழக அரசியலுக்கு வருவார் என்றும், அது அவருக்கே தெரியாது என்றும் கூறிய இவர், முதல்வர் ஆகக்கூடிய வாய்ப்பு தளபதிக்கு அதிகம் இருக்கிறதாவும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here