அனிருதால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர்

0
21
பையா, பீச்சாங்கை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர்தான் பொன்முடி. இவர் இப்போது “சோமபான ரூப சந்தரன்” என்கின்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் பிக்பாஸ் போனதால் இப்பொழுது ஐஸ்வர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதுபோக இந்த படத்தில் ஒரு பாடலை மட்டும் அனிருத்தை பாட வைக்கலாம் என்று இப்பட இசைமைப்பாளர் அப்பாஸ் ரஃபி உறுதியளித்திருக்கிறார். இந்த நம்பிக்கையில் பொன்முடியும் பட வேலைகளை பார்த்திருக்கிறார். ஆனால் இப்போது அனிரூத் படு பிஸியாக இருப்பதால் பாட மறுத்துள்ளதாவும், அடுத்த படத்தில் பாடுகின்றேன் எனவும் கூறியிருக்கிறார். இதை கேட்ட இயக்குனர் பொன்முடி, அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.
உடனே அவருடைய உதவியாளர்களால் காப்பாற்றப்பட்டு இப்போது ஓய்வில் இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, அனிரூத் பாடவில்லை என்ற வேதனை அடைந்ததால்தான் சாக முடிவெடுத்தேன் என்றும் ஆனால் அதிர்ஷ்டவசமாக என்னுடைய உதவியாளர்களால் காப்பாற்ற பட்டுவிட்டுடேன் அதுமட்டுமில்லாமல்  இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here