ஆர்ஆர்ஆர் படத்தில் டெய்சி எட்கர் ஜோன்ஸ்க்கு பதிலாக ஜாக்குலின் பெர்னாண்டஸ்

0
46

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் என்று இரு கதாநாயகர்கள் நடித்து வருகின்றார்கள்.

இதில் ராம்சரணுக்கு ஜோடியாக அல்யா பட் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் க்கு ஜோடியாக டெய்சி எட்கர் ஜோன்ஸ் நடிக்க இருந்த நிலையில் இந்த படத்திலிருந்து சில காரணங்களால் விலகிவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

முக்கியமாக ஜூனியர் என்.டி.ஆர் க்கு இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாவும் அதில் இரண்டாவது கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜூனியர் என்.டி.ஆரை காதலிக்கும் பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here