இந்த வாரம் இவரா வெளியேற போகிறார்?

0
24

தனியார் தொலைக்காட்சி மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை விட இந்த மூன்றாவது சீசனுயில் பெரிதாக சொல்வதற்கு கடுமையான போட்டிகள் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசன் 3ல் பங்கேற்ற16 போட்டியாளர்களில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை இப்போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். முக்கியமாக வனிதா மட்டும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு மூலமாக நுழைந்தார். இது பார்க்கும் பலர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு சீசனில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் யாரும் இந்த பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்தது இல்லை.

இதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் யாரும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த வரத்திற்காக சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின், முகேன் என இவர்கள் நாமினேஷனில் உள்ளார்கள். இந்த வாரத்தில் யார் வெளியேருவார் என்பது நாளைத்தான் தெரிய வரும். இதுபோக ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா என 3 பேரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர் இதனால் தற்போது பல விதமான பிரச்சனைகள் வீட்டில் நடந்து வருகிறது.

நாமினேஷன் ஆனவர்களில் சேரனும், ஷெரினும் கடைசி இரண்டு இடத்தில் இருப்பதால் இந்த வாரம் சேரன் அல்லது ஷெரின் வெளியேறபடலாம் என பேசப்பட்டு வருகின்றது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஷெரினை விட சேரன் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளதால் சேரன் வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here