இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்

0
50

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திர பேடி, நடித்து, ஷங்கர் இஷான் லாய் இசையில் அடுத்த வருடம் வெளி வர இருக்கும் படம் தான் “சாகோ”.

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் படங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கு அதேபோல் இந்த படத்தையும் 300 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக  ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் படமாக்கப்படுகிறது.

இதுதான் ஏற்கனவே தெரிந்த தகவல் ஆயிற்றே ஏன் இதை இன்னைக்கு சொல்கிறீர்கள் என்று கேட்கலாம்?. இன்று பிரபாஸ்யுடைய பிறந்தநாள், அதனால் இன்று நிறைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சிட்டு வருகிறார்கள். இதுபோக பிரபாஸுடைய பிறந்தநாள் முன்னிட்டு இவர் நடித்துக்கொண்டிருக்கிற “சாகோ” படத்தினுடைய “Shades Of Saaho Chapter 1” வெளிட்டுருந்தார்கள்.

வெளிவந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும் போது படம் முழுவதும் ஆக்க்ஷனோடு வெளிவர போதுன்னு தெள்ள தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் ஸ்டைலில் ஸ்டண்ட் சிறப்பாக இருக்கிறது. Saaho Chapter 1 ன்னின் இறுதியில்தான் நடிகர் பிரபாஸ் வருகிறார். இதற்கு பிறகு இந்த படத்தோட சீரீஸ் வரும் என்று தயாரிப்பு நிறுவனத்திலிருந்து தெரிவிச்சிருக்கிறார்கள்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here