உண்மையான பறவை மனிதர் – சலீம் அலி

0
57

டைரக்டர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் நேற்று வெளிவந்த படம்தான் 2.0. இந்த படத்துக்கு மக்களிடையே நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இப்படத்தில் வில்லனாக பறவை போன்ற தோற்றத்தில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். 2.0 படத்தில் அக்‌ஷய் குமாருடைய பறவை வில்லன் கேரக்டரை உருவாக்க இயக்குனர் சங்கரும், எழுத்தாளர் ஜெயமோகனும் பெரும் முயற்சி எடுத்துள்ளார்களாம்.

அது என்னவென்றால் அக்‌ஷய் குமார் நடித்த அந்த கேரக்டரை Birdman Of India என கூறப்படுகிற சலிம் அலி. இவர்தான் முதன் முதலில் இந்தியா முழுக்க பறவைகள் பற்றிய கணக்கெடுப்பையும் பறவைகள் பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளாராம். பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வாங்கியவர் ஜூன் 20 1987 ல் இறந்துவிட்டாராம்.

இதுபோக நேற்று வெளியான இந்த 2.0 படத்தினுடைய முதல் நாள் கலெக்சன் பற்றி அறிய ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள். இதுவரை ரிலீஸ் ஆன படங்களில் சென்னையில் விஜய்யின் சர்கார் தான் முதலிடம் பிடித்திருந்தது, ஆனால் அதை முறியடித்துவிட்டது 2.0 படம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல் சென்னையை தாண்டி 2.0 படம் ஹிந்தியில் முதல் நாளில் மாஸ் வசூல் செய்துள்ளது. சென்னையில் – ரூ. 2.64 கோடி, ஹிந்தி- ரூ. 25 கோடி என்று வசூல் மழையில் நனைந்துள்ளது. ரஜினியின் இந்த படத்திற்கு எல்லா இடத்திலும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் படம் வேறொரு புரட்சி செய்யும் என கூறப்படுகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here