காப்பான் டீசர் ஒரு பார்வை

0
48

நடிகர் சூர்யா தொடர்ந்து என்.ஜி .கே , காப்பான் மற்றும் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்திலும் நடித்து வருகிறார்.

என்னதான் இத்தனை படங்கள் நடித்து வந்தாலும் ஒன்றரை வருடமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படங்களை பற்றின செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சயீஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் காப்பான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் வெளியான 1 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

முக்கியமாக வெளிவந்துள்ள காப்பான் டீசரில் மோகன் லால் பிரதமராவும், சூர்யா பாதுகாவலராவும் நடித்துள்ளது போல் உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு கே வி ஆனந்தின் ஆஸ்தான இசைமைப்பளார் ஹாரிஸ் ஜெயராஜின் இசையை காப்பான் டீஸரிலேயே தான் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார்.

குறிப்பாக நடிகர் சூர்யா காப்பான் டீசரில் விவசாயத்திற்கு குரல் கொடுப்பது போலவும், பயங்கரவாதி போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதோடு உளவாளி மற்றும் உயர் பாதுகாப்பு துறை அதிகாரி என்று பல்வேறு ரோல்களில் சில காட்சிகளில் இடம் பெற்றுள்ளார். 1.33 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில் விவசாயம், கார்ப்பரேட் கம்பனிகளின் ஆதிக்கம், பயங்கரவாதம் போன்ற பல பிரச்சனைககளை இந்த டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here