“கார்த்தி 19” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்.

0
42

‘கார்த்தி 19’ என்ற பெயர் சொல்லப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. வித்தியாசமான கதை அம்சமான ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி. அடுத்ததா புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாவும் இதுக்காக சென்னையில் சில இடங்களில் மட்டும் பெரிய செட் போடப்படுகிறது. பிரமாண்ட பொருள் செலவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள்.

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், படத்தொகுப்பு – ரூபன், புரடக்‌ஷன் டிசைனர் – ராஜீவன், கலை – ஜெய், ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – P.S.ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – அரவிந்தராஜ் பாஸ்கரன்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here