கிரேசி மோகன் நினைவு நாளில் கமல் புகழாரம் !!

0
21

பிரபல நாடக, திரைப்பட நடிகர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகன் அவர்கள் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்து தனது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார்

அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகன் ஆகிய இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதும் அது மட்டுமின்றி கமல்ஹாசனுடன் ஆபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, தெனாலி, சதிலீலாவதி, காதலா காதலா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆகிய படங்களில் கிரேசி மோகன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி என்பது அனைவரும் தெரிந்ததே.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here