குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் புது படத்தில் இணைந்தார்!!

0
63

‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக்கில் குக்கு வித் கோமாளி சிவாங்கி இணைந்துள்ளார். 

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடிக்க உள்ளனர். 1972-ம் ஆண்டு சித்ரலேயா கோபு இயக்கத்தில் வெளியான ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்தை மீண்டும் தற்காலத்திற்கு ஏற்றவாறு இயக்குனர் கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார்.

மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இருவரும் கலகலப்பு, கலகலப்பு 2 ஆகிய படங்களை அடுத்து இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றயுள்ளனர்.  நடிகை ப்ரியா ஆனந்த் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  ‘வணக்கம் சென்னை’ படத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் கூட்டணி இணைந்து நடித்திருந்தனர். அதையடுத்து இந்தப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

தற்போது இந்தப் படத்தில் குக்கு வித் கோமாளி சிவாங்கியும் இணைந்துள்ளார். இன்று பூஜையுடன் இப்படத்தின் பணிகள் துவங்கியுள்ளது. அதில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சிவாங்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

இதற்கிடையில் மிர்ச்சி சிவா கடைசியாக ராம் பாலா இயக்கத்தில் ‘இடியட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘சுமோ’ என்ற படத்திலும் நடித்து அவர் முடித்துள்ளார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here