சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் ராசிக்கேற்ற படம்

0
169

ஒவ்வொருவரின் வாழ்கையிலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இதில் எத்தனை ராசிகள் இருந்தாலும் குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே ‘தனுசு ராசி’ தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக எல்லோரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் சஞ்சய் பாரதி.

இப்படத்தின் தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, “நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். முக்கியமாக ‘தனுசு ராசி நேயர்களே’ என்று இந்த படத்திற்கு பெயரிட காரணம், இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர்.

இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது.

எங்கள் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசமான இசை தரும் ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்றும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதி செய்து வருகிறோம். என்னுடைய இந்த ஸ்கிரிப்ட்டை உறுதியாக நம்பி, அதை திரைப்படமாக்க எனக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார் சஞ்சய் பாரதி.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here