சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் ‘மெர்சல்’ சாதனை

0
40

தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தோட உச்சத்தில் இருக்காங்கன்னு தான் சொல்லனும். ஏன்னா?

லண்டனை சேர்ந்த IARA ங்கிற அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்களை தேர்வு செய்து வருகிறது. மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதை வழங்கி வருகிறது. அதே போல் 2018 ம் ஆண்டுக்கான விருது போட்டி நடைபெற்றது. அதில் “மெர்சல்” படத்தில் நடித்த தளபதி விஜய்க்கு “சிறந்த நடிகர்” மற்றும் “சிறந்த சர்வதேச நடிகர்” என்று இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

விஜயுடன் சேர்ந்து பிரபல ஹாலிவுட் நடிகர்களான ஜோஷிவா ஜாக்சன், கென்னத் ஒக்கோலி, அட்ஜட்டே அனாங், ஹசன் என்று இவங்களோட பெயர்களெல்லாம் இடம் பெற்றிருந்தது. இதற்காக இணையத்தளத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதுக்கு விஜய் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக IARA அமைப்பு அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பு வந்ததும் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ள ஆரம்பித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் அவர்களுடைய வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தார்கள். முக்கியமாக தேமுதிக தலைவர் விஜய்காந்த், வெங்கட் பிரபு, மனோ பாலா, சாந்தனு, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், சதிஷ், எஸ். ஜே. சூர்யா, அர்ச்சனா கல்பாத்தி, விவேக் மற்றும் சர்கார் படத்தோட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸும் தன்னோட வாழ்த்துக்களை தெரிவித்துருந்தார். அதுமட்டுமில்லாமல் இன்று மாலை 6 மணிக்கு சர்கார் படத்தினுடைய சிங்கிள் ட்ராக் வெளிவர இருக்கிறது. மாலை 6 மணிக்காக தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here