டோவினோ தாமஸ் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் – புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் !!

0
43

தனுஷ் நடித்த ’மாரி 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரின் குழந்தைக்கு முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த ’மாரி 2’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் முன்னணி ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மாயநதி, லூசிபர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள டொவினோ தாமஸ், கடந்த கடந்த 2014ஆம் ஆண்டு தனது காதலி லிடியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். டொவினோ-லிடியா தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு ’தஹான்’ என பெயர் வைத்தனர்.

குழந்தை தஹானின் முதலாவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் டொவினொ தாமஸ் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தில் டொவினோ, அவரது மனைவி, மகள் இஷா மற்றும் தஹான் ஆகியோர் உள்ளனர் .இந்த புகைப்படத்தில் பிறந்தநாள் ’வாழ்த்துக்கள் மகனே! கடந்த ஊரடங்கின் போது பிறந்தாய். தற்போதும் ஊரடங்கில் தான் இருக்கிறோம். ஆனால் என்னை பொறுத்தவரை இது ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. இந்த ஒரு வருடத்தில் உன்னிடம் அதிக நேரம் செலவு செய்தேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here