தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்களின் திருமணச்செய்தி

0
60

தமிழ் சினிமாவில் பிரபலமான சில மாஸ் நடிகர்கள் எப்பொழுது திருமணம் செய்வார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாக சொல்லகூடிய நடிகர்கள் என்றால் விஷால், ஆர்யா, சிம்புதான்.

தற்போது நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாக்கும் கூடிய சீக்கிரமே நிச்சயதார்த்தம் நடக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆர்யாவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிளை’ என்கின்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். அதிலிருந்தாவது எதாவது ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் சில காரணங்களால் நடக்காமல் போனது. இருந்தாலும் நடிகர் ஆர்யா, பிரபல நடிகையுடன் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. அது யாரென்று பார்த்ததில், ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் ஜோடியாக நடித்த சயிஷா சைக்கல்தான். முக்கியமாக ஆர்யாவும், சையிஷாயும் காதலித்து வருவதாவும், அதனால்தான் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளதாவும் சொல்லப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து சிம்புவுக்கும் ரொம்ப வருஷமாக அவர்கள் வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள் இருந்தாலும் இவர்கள் எதிர்பார்க்கிறமாதிரியான பெண் கிடைக்காததால், சிம்புவுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாமல் போய்விட்டதாம். இதற்காகவே பெண் தேடும் வேலையில் தீவிரம் காட்டிவருகிறார்களாம்.

மொத்தத்தில் இந்த வருஷத்தில் 3 கதாநாயகர்களுக்கும் திருமணமாவதற்க்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here