தல பாணியில் அரசியல்வாதிகளுக்கு வெங்கட் பிரபு காட்டம்

0
130

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா, சம்பத் ராஜ், பிரேம்ஜி,கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 12ம் தேதி வெளிவர இருந்த ஆர் கே நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. வருகின்ற தேர்தலுக்கு பிறகுதான் படம் வெளிவரும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

வெளிவந்த அந்த வீடியோவில படத்திற்கான அத்தனை வேலைகள் முடிந்தாலும், சில பல காரணங்களால் நாங்கள் செய்யாத தவறுக்கு தற்போது சில பிரச்சனைகளை சந்திக்கின்றோம் என்றும் நான் எந்த பெயரையும் குறிப்பிடவிரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். முக்கியமாக தேர்தலுக்கு பிறகுதான் ஆர் கே நகர் படம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தில் அரசியல் இல்லை, யாரையும் குறிப்பிட்டு இந்த படம் எடுக்கவில்லை, இது ஒரு ஜனரஞ்சகமான படம் என்று தெரிவித்திருந்த இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோவின் கடைசியில் தல அஜித் பாணியில் வாழு வாழவிடு என்று யாரையோ குறிப்பிட்டு சொல்வது போல் கூறிருந்தார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here