தளபதி பெயரல்ல உணர்வு !!

0
33

“இளைய தளபதி”  விஜய் என்று  அனைவராலும் அறியப்படும் ஜோசப் விஜய் ஜூன் 22, 1974 இல் பிறந்தார். இவரது தந்தை இயக்கிய 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் தனது 10 வயதில் 1984 ல் வெளியான `வெற்றி`  என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம்  வயதில் தன் தந்தை இயக்கி 1992 ஆம் ஆண்டு வெளியான  `நாளைய தீர்ப்பு`  படத்தில் முதன்முறை யாக கதாநாயகனாக திரையுலகில் கால்பதித்தார். பின் விக்கிரமன்னின் `பூவே உனக்காக ` படம் இவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. இயக்குனரான தந்தையிடம் நடிப்பின் நுணுக்கங்களையும், பாடகியான தாயிடம் பாடல் பாடுவதையும் கற்றுக் கொண்டார். இது இவரை “பம்பாய் காரி” முதல் “குட்டி ஸ்டோரி” வரை பாட வைத்து ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

`பூவே உனக்காக` படத்திற்கு பிறகு அடுத்தடுத்த தோல்விப் படங்கள் வெளிவந்தன. பின் கதைத் தேர்வில் அதிக ஈடுபாடு காட்டி `காதலுக்கு மரியாதை`  `துள்ளாத மனமும் துள்ளும்` என்று தன் வெற்றிப் படங்களினால் ரசிகர்களுக்கு நடிகனாக இல்லாமல் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஆனார். விஜய் அரசியலுக்கு வருவாரா என்று பலர் எதிர்பார்த்து, பயந்து  கொண்டிருந்த நிலையில் அதற்கு பதில் சொல்வதாக அமைந்தது. `தலைவா` படம். அதற்கு எத்தனை பிரச்சனைகள்.  ஆண்ட கட்சி முதல் ஆளும் கட்சி வரை ஆட்டம் கண்டது. முதலில் படத்தை முடக்கினாலும் பின் தளபதி தளபதி என்று ரசிகர்கள் எக்காள சத்தம் முழங்க படம் வெளியானது. பின்னர் வந்த `மெர்சல்`  `சர்கார்` படங்களிலும் விஜய் சரமாரியாக அரசியல் பேசியிருந்தார். இவரது படம் வெளியாகும் செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் சில அரசியல் வாதிகளுக்கு பீதியையும் ஏற்படுத்தியது. தன் மீது ஆரம்பம் முதல் தற்போது வரை பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதனைத் தவிர்த்து தடைக் கற்களை படிக் கற்களாக மாற்றினார் தளபதி விஜய். விஜய் வெறும் பெயரல்ல ஒவ்வரு ரசிகனின் உணர்வு. ஒரு நல்ல நடிகனாய், அண்ணனாய், வழிகாட்டும் தலைவனாய்  ரசிகர்கள் மனதில் அசையா நாற்காலியில் அமர்ந்து சர்கார் நடத்தும் ரசிகர்களின் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் தமிழ் படம் கர்வம் கொள்கிறது 🥳

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here