தீபாவளியில் சர்காருடன் மோதும் திமிரு புடிச்சவன்

0
38

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துடன் இதேநாளில் வெளியாகிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேஷா ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இதில் நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

மற்றொருபுறம் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. Sun Pictures இந்த படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக அமையும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here