துப்பாக்கி 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்

0
88

தளபதி விஜயை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கி சமீபத்தில் வெளிவந்த படம்தான் சர்கார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர்ஸ்டார் வைத்து இயக்க போறதா நிறைய தகவல் வெளியானது.

முக்கியமா தலைவர் வைத்து இயக்க இருந்த கதை அரசியலை மையமாக கொண்டது எனவும் அதற்கு “நாற்காலி” என்று பெயரிடப்போவதாவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், மறுபடியும் தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

அது என்னவென்றால் சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு இவர் கொடுத்த பேட்டியில், துப்பாக்கி படத்தின் 2 ம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாவும், முக்கியமா கத்தி, துப்பாக்கி இரண்டுமே பாகம் 2 இயக்குவதை கருத்தில் கொண்டுதான் உருவாக்கப்பட்டதெனவும், அந்த துப்பாக்கி, கத்தி கதைகளை மிஞ்சிற அளவுக்கு பாகம் 2 வின் கதை அமைந்தால் நிச்சயமாக பாகம் 2 வரும் என ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்திருக்கிற இந்த விஷயம் தளபதி ரசிகர்களை குஷிப்படுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here