பாகுபலிக்கு இணையாக சர்கார் படத்தின் வியாபாரம் இருக்கும்.

0
49

நடிகர் விஜயுடைய சர்கார் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிக எதிர்பார்ப்பில் இருப்பதாலேயே என்னவோ இந்த படம் அதிக தொகைக்கு பல ஏரியாக்களில் விற்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பாகுபலிக்கு எவ்வளவு வரவேற்ப்பு இருந்ததோ அதற்கு இணையாக சர்கார் படத்தின் வியாபாரம் இருக்கும் என சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சர்க்கார் படத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்காது என்று கூறியிருக்கிறார்.

இதுபோக தளபதி அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் அதிகம் ஏங்கியிருக்கும் நிலைமையில் இப்படி ஒரு அரசியல் பிண்ணனியை வைத்து சர்கார் படம் வருவதால், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிகுந்த இருக்கின்றனர்.

தற்போது Saavn Appல சர்கார் பட பாடல்களை இதுவரை 1 மில்லியன் ரசிகர்கள் கேட்டு ரசித்தாக தகவல் வெளியாயிருக்கிறது. இதில் வருத்தபட வைக்கும் விஷயம் என்னவென்றால் மெர்சல் பட பாடல்கள் கிட்டத்தட்ட 13 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் கேட்டு ரசித்து அதிக வரவேற்பை பெற்றிந்தது ஆனால் தீபாவளிக்கு வெளிவர இருக்க சர்கார் பட பாடலுக்கு வந்திருக்கும் வரவேற்பு மிக குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here