பாஜகவில் சூப்பர் ஸ்டார்

0
79

தமிழ் சினிமாவிலிருந்து நிறைய நடிகர்கள் அரசியலில் கால் தடம் பதித்துள்ளனர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதற்கு உதாரணமாக புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர், செல்வி ஜெ ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த், சீமான் என்று பலர் அரசியலில் நுழைந்துவிட்டனர். அந்த வகையில் தற்போது நாம் அதிகமாக எதிர்பார்க்கும் நடிகர்கள் யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் தளபதி விஜய். இவர்களில் உலகநாயகன் மக்கள் நீதி மையம் என்ற காட்சியை தொடங்கி அதற்கான பணிகளிலும், சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக நாம் அனைவரும் அதிகமாக அரசியலில் இவர் வரமாட்டாரா என்று ரொம்ப நாளாக எதிர்பார்த்து ரசிகர்கள் தவிப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்குத்தான் என்றே சொல்ல வேண்டும். தற்போது அதற்கான நேரம்தான் வந்துவிட்டது என சொல்ல வேண்டும்.

முக்கியமாக இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெலுங்கான ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழ்நாட்டில் தமிழிசை அவர்கள் வகித்த பதவி தற்போது காலியாக உள்ளதாம். இந்த இடத்திற்கு வர ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சூப்பர் ஸ்டார் ரஜினி என இவர்களுடைய பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் அதிகமாக வர வாய்ப்பை பெற்றுள்ளவர் சூப்பர் ஸ்டார்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதுமட்டுமில்லாமல் பொதுவாகவே பாஜகவிருக்கும் ரஜினிக்கும் ஒரு அழுத்தமான புரிந்துணர்வு உள்ளது என்று நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இதை தெரிந்து கொண்டே அரசியல்வாதிகளும் பாஜக தலைவர் இடம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கே என்றே சொல்லி வருகின்றார்களாம். இதற்கான பேச்சு வார்த்தையில் சூப்பர் ஸ்டார் இருப்பதாகவும் கூடிய விரைவில் இதை பற்றின அதிகார தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here