புதிய படங்களில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை

0
42

நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேல். வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006ல் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றியடைந்த படம். இதை தொடர்ந்து இம்சை அரசன் 24ம் புலிகேசியை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலேயும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்து, படத்தை இயக்கினார் சிம்புதேவன்.

இந்த படத்தோட முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அரண்மனை அரங்கு அமைத்து ஆரம்பித்தார்கள். கொஞ்சம் நாள் படப்பிடிப்பு நல்லபடியா போனதாகவும், பிறகு இந்த படத்தோட ஆடை வடிவமைப்பாளர் மாற்றப்பட்டதும், உள்பட பல பிரச்சனைகள் ஏற்பட்டு இயக்குனர் சிம்புதேவனோடு தகறாரு ஏற்பட்டு இந்த படத்திலிருந்து வடிவேலு விலகினார். இதோடு படப்பிடிப்பும் நின்று போனது.

இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். நடிகர் சங்கமும் வடிவேலுக்கு 2 கடிதங்கள் அனுப்பி விளக்கம் கேட்டு சமரச முயர்சில் ஈடுபட்டது, ஆனால் வடிவேலு இந்த படத்தில் நடிக்க மறுத்து, இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் திட்டமிட்ட தேதியில் ஆரம்பம் ஆகலைனும், தனக்கு பொருளாதார இழப்பு, மற்றும் மன ஊளைச்சல் ஏற்படுத்திவிட்டதாகவும் கூறி அந்த படத்தில நடிக்க முடியாதுதென்று பதில் அனுப்பினர். இந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தனக்கு அந்த படத்தின் மூலம் ரூ 9 கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறி, அதை வடிவேல் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென்று இன்னொரு கடித்ததை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பினார்.

அந்த தொகையை கொடுக்க வடிவேலு சம்மதிக்கவில்லை. இதனால வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வடிவேலுவை 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதால் கோலிவுட் வட்டாரத்தில பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here