பேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோஷன்கள் நாளை முதல்

0
16

இந்த வருஷம் பொங்கல் எல்லோருக்கும் அதிரடியா இருக்க போகிறது என்று சந்தேகமே இல்லாமல் சொல்லாம். ஏன்னா? தலைவரின் ‘பேட்ட’ மற்றும் தல யின் ‘விஸ்வாசம்’ வெளிவர காத்திருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜ், தான் ஒரு படு பயங்கரமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெறியன் என்பதை போஸ்டர்கள், டிரைலர் மூலம் நிரூபித்துள்ளார். முக்கியமாக பழைய ரஜினி மீண்டும் வந்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோஷன் இன்னும் தொடங்கவே இல்லை. இதில் பெரிய கூத்து என்னவென்றால் அவர்களது படத்தை அவர்களே சொந்த தொலைக்காட்சியில் போடவில்லையா என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

ஆனால் பேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோஷன்கள் நாளையில் இருந்து ஒளிபரப்பாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஒரு தகவல் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here