மீண்டும் இணைத்த பிரபல ஜோடி

0
29

2018 ஆண்டு வெளிவந்த படங்களில் வெற்றி படமாக அமைந்ததுதான் ராட்சன். விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ் காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். குறிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிந்தது. இந்த படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், அமலா பால் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறார்கள். அது என்ன படம் என்றால்?

தெலுங்கில் நானி, ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஜெர்ஸி படத்தினுடைய தமிழ் ரீமேக்கில்தான் விஷ்ணு விஷால், அமலா பால் என இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தை இணைந்து தயாரிக்கின்ற தெலுங்கு நடிகர் ராணாதான் ஜெர்ஸி படத்தினுடைய தமிழ் ரீமேக்கையும் இணைந்து தயாரிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here