மீண்டும் சிக்கலில் தனுஷ் படம்

0
70

கோலிவுட் சினிமாவில் கதைக்கு ஏற்றாற்போல் தன்னை உருவாக்கப்படுத்திக்கொள்ளும் நடிகர்களில் தனுஷ் அவர்களும் இருக்கின்றார் என்றே சொல்லவேண்டும். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள நடிகர் தனுஷ் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றே. அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னைக்கு பிறகு வெளிவர இருக்கின்ற படம்தான் அசுரன்.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதுமட்டுமில்லாமல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தனுஷ் நடிப்பில் இந்த படம் வெளிவருமா என்று எதிர்பார்த்த படம்தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ .

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிருந்த இந்த படத்தில் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷின் அண்ணனாக சசிகுமார் முதல் முறையாக நடித்துள்ளார். முக்கியமாக இந்த படத்தின் எல்லா வேலைகளையும் முடித்திருந்தாலும்,சில பல நீதி நெருக்கடி காரணமாக படம் வெளியாகாமல் இருந்தது. இதனால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அதிகரபூர்வமாக வந்தது ரசிகர்களை குஷிப்படுத்திருந்தது.

கண்டிப்பாக படம் செப் 6 ம் தேதி ரிலீசாகும் என்ற சந்தோஷத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில் மறுபடியும் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கான பேச்சுவார்த்தை நேற்று நடந்துள்ளது. இன்றும் நடந்து வருகின்றது. எல்லா விஷயமும் சுமுகமாக முடிந்தால் படம் வெளிவரும் இல்லையென்றால் மீண்டும் தள்ளி போகும் என்பதில் சந்தேகம் இல்லாமல் சொல்லாம்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here