முள்ளும் மலரும் இயக்குனர் மஹேந்திரன் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் எதார்த்த படத்தை மக்களிடம் கொண்டுசேர்த்த இயக்குனர் மகேந்திரன் (79) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சில நாளாக அவதிப்பட்டு வந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய உடல்நிலை முன்னேற்றம் இல்லாத நிலையிலும் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. எம் ஜி ஆர் மூலமாக திரைத்துறையில் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக திரைப்பயணத்தை தொடங்கிய இவர் 26 படங்களுக்கு திரைக்கதையும், வசனமும் எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட 12 படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருதராகவும், இன்றைக்கும் பல முன்னணி இயக்குனருக்கும், வளர்ந்து வரும் இயக்குனருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்பவர்தான் இயக்குனர் மகேந்திரன். குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் ,உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற பல படங்கள் இன்று வரையும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

இயக்கம், திரைக்கதை, வசனம் மட்டுமில்லாமல் நடிப்பிலும் மக்களை கவர்ந்தவர் இயக்குனர் மகேந்திரன். முக்கியமாக விஜயுடன் தெறி, ரஜினிகாந்துடன் பேட்ட, விஜய்சேதுபதியுடன் சீதக்காதி, நிமிர், மிஸ்டர் சந்திரமௌலி, பூமராங் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் மகேந்திரனின் உடல் தற்போது பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலக பிரபலன்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டுத்துள்ளது.

மகேந்திரனின் மறைவு திரையுலகினரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . பல திரைபிரபலன்களும் அஞ்சலி தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இயக்குனர் மகேந்திரன் அவர்களின் இறப்பு தமிழ் சினிமாவின் மிக பெரிய பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *