மூன்று மொழிகளில் வெளியாகும் காஞ்சனா 3

0
95

ஹாலிவுட் படம் மாதிரி கோலிவுட்டில் சீரிஸ் படங்கள் கொண்டுவரப்பட்டது இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள்தான். இவர் இயக்கி நடித்து வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2, வெளிவந்து வெற்றியடைந்ததை அடுத்து காஞ்சனா 3 படத்துக்கு எல்லோரும் தற்போது ஆர்வமாக இருக்கிறார்கள்.


சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் திரைக்கு வெளிவர இருக்க காஞ்சனா 3 யில் ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி என்று இன்னும் நிறைய பிரபலங்கள் நடித்துள்ளனர். காஞ்சனா 3 படம் வெளிவருவதற்கு முன்பே இந்த படத்தில் உள்ள ட்ரைலர், பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டிருந்தது.

முக்கியமாக இதுவரை ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2 போன்ற படங்கள் எல்லாம் தமிழ், தெலுங்கில் வெளியானது. அனால், தற்போது திரைக்கு வெளிவர இருக்க காஞ்சனா 3 தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் கன்னடத்திலும் ஏப்ரல் 19 ம் தேதி வெளிவரப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here