ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் – தர்பார்

0
100

பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் மற்றும் தர்பார் என்ற தலைப்பை இந்த படத்தை தயாரிக்கின்ற லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2.0 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையா லைகா நிறுவனம் தலைவரின் தர்பார் படத்தை தயாரிக்க உள்ளது. வெளிவந்துள்ள தர்பார் படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் செம மாஸ்ஸாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் தர்பாரில் தலைவர் ஒரு IPS போலீஸ் அதிகாரியாக இருப்பது போலும் அவரை சுற்றி நடக்கும் அரசியல்தான் படத்தின் கதையாக இருக்குமோ என்று கணிக்க வைக்கிறது.

முக்கியமாக சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்கள் என்று மூன்று படங்களில் நடித்து முடித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா 11 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் இணைந்துள்ளார். குறிப்பாக கோ கோ கோ படத்திற்கு அடுத்து லைகா தயாரிப்பில் நயன்தாரா இணையும் இரண்டாவது படம் இது. மேலும் இப்படத்தில் அனிரூத் இசைமைக்கிறார்.

பேட்ட படத்தை தொடர்ந்து அனிரூத் சூப்பர் ஸ்டாருடன் கூட்டணியில் சேர்ந்துள்ள இரண்டாவது படம்தான் தர்பார். தளபதி விஜய் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி லைகா நிறுவனம் தயாரித்த கத்தி படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸூடன் அனிரூத் இரண்டாவது முறையாக இனனித்துள்ளார். தளபதி படத்திற்கு பிறகு சந்தோஷ் சிவன் இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்தோஷ் சிவன் இணைகிறார். இதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸூடன் துப்பாக்கி, ஸ்பைடர் போன்ற இரண்டு படங்களில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் தற்போது மூன்றாவது முறையாக தர்பார் படத்தில் இணைந்துள்ளர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்கவுள்ளது. அடுத்த வருடம் 2020 பொங்கலுக்கு விருந்தாக இந்த படத்தை வெளியிடபோவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here