ராசியில்லாத நடிகையா? நடிகை பதிலடி

0
43

சமூக வலைதளத்தில் பலரும் நிறைய விஷயங்களை பற்றி விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். முக்கியமாக அரசியல்வாதிகளையும், திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பற்றியும் பதிவு செய்து வருவது அதிகமாகியுள்ளது.

அந்த வகையில் இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்டிருக்கும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் பற்றி ஒருவர் ட்விட்டரில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறிருப்பது என்னவென்றால், இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் பிரியா ஆனந்துடன் நடிகை ஸ்ரீ தேவி நடித்தார்.

தற்போது அவர் உயிரோடு இல்லை. அதே போல் எல் கே ஜி படத்தில் பிரியா ஆனந்துடன் ஜே கே ரிதீஷ் நடித்தார் அவரும் இறந்துவிட்டார் எனவும் மேலும் பிரியா ஆனந்த் ஒரு ராசியில்லாத நடிகை என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை பிரியா ஆனந்த், உங்களை போன்ற மனிதர்களுக்கு நான் பதில் அளிப்பதே இல்லை இருந்தாலும் நீங்கள் கூறிய விஷயம் மோசமானது அதனால் ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன் என்று, மிகவும் சாதாரணமாக, உங்கள் ட்விட்டர் கணக்கின் பெயர் ‘அன்பு’ அது ஒரு நாள் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். குறிப்பாக அன்பு என்ற ஒரு விஷயத்துக்குத்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று பொறுமையான பதிலை அளித்திருந்தார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here