விக்ரம் பிரபு மகனுக்கு விராட் வாழ்த்து

0
102

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு இருக்கின்றார். இவரின் நடிப்பில் நாம் கடைசியாக பார்த்த துப்பாக்கி முனை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. அதை தொடர்ந்து அசுரகுரு படத்திலும், மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்ற வானம் கொட்டட்டும் படத்தில் நடித்து வருகின்றார் விக்ரம் பிரபு .

தனா சேகரன் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மடோனா ஜெபஸ்டின் நடிக்கின்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாதாகவும் செய்திகள் வெளிவந்தன. சித் ஸ்ரீராம் இசைமைக்க உள்ள இந்த படத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல் என பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் படத்தின் கதையை இயக்குனர் மணிரத்னம் எழுதியுள்ளார்.

தற்போது விக்ரம் பிரபு ஆனந்த வெள்ளத்தில் இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும் காரணம் (செப் 2) நேற்று முன்தினம் விக்ரம் பிரபு மகன் விராட்க்கு பிறந்தநாள் என்பதால் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ட்விட்டரில் வீடியோ மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை விக்ரம் பிரபு மகிழ்ச்சியுடன் “உங்களுடைய பரபரப்பான நேரத்திலும் என் மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததை நினைத்து சந்தோசமாக உணர்கிறேன். என் மகன் உங்கள் விடியோவை பார்த்து மகிழ்ந்தான். உங்கள் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கும் வாழ்த்துகள் என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விக்ரம் பிரபு.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பொதுவாகவே சிவாஜி கும்பத்தினர் பரம கிரிக்கெட் ரசிகர்கள் என்பதாலும் சிவாஜி அவர்கள் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துள்ளார் என்பதும் நீங்கள் அறிந்த ஒன்றே. முக்கியமாக பல கிரிக்கெட் வீரர்களும் சிவாஜி அவர்களின் வீட்டில் விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் விக்ரம் பிரபுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்குமாம். அதிலும் விராட் கோலியின் பயங்கர ரசிகர் என்பதாலே தன் மகனுக்கு விராட் என்று பெயர் வைத்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here