விஜய் ஆண்டனியின் “தமிழரசன்” படத்தில் இணையும் சங்கீதா

0
55

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் “தமிழரசன் ” விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி,ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்க ஒப்பந்தமாயிருக்கிறார். நடிகை சங்கீதா இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் வில்லி வேடத்தில் நடித்து தூள் கிளப்பிருந்தார். அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார். இது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு, எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். குறிப்பாக தமிழரசன் படத்தில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என தெரிவித்துள்ளார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here