சமீப காலமாகத் திரைப்பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க மும்முரமாக செயல் பட்டு வருகின்றனர். உதாரணமாக எம். எஸ். தோணி, டிராபிக் ராமசாமி, நடிகையர் திலகம் போன்ற நிறைய வாழ்க்கை வரலாறு படங்கள் திரைப்படமாகி இருக்கிறது. இதில் மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வாழ்க்கை வரலாறு படத்தின் கதா பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

இதில் எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் காஜல் அகர்வாலுடன் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இருமுகன் படத்தில் டெபுடி கமிஷனராகவும், சமீபமாக திருட்டுபயலே 2 படத்தில் ஒரு டிவி சேனல் ஹெட்டாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.

மற்ற கதா பாத்திரத்தில், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங்கும், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரனும், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகுவும், பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளனும், உயிர் தொண்டனாக வையாபுரியும் நடிக்கிறனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஏ.எம்.எட்வின் சகாய்யும், திரைக்கதை மற்றும் வசனம் எழுதுபவராக செம்பூர் ஜெயராஜும், படத்தொகுப்பாளராக எஸ்.பி.அகமதும் பணிபுரிகின்றனர். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here