விஸ்வாசம் டீசர் கிறிஸ்துமஸ்க்கு வெளியிட திட்டமிடபட்டிருக்கிறது

0
31

தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தா வெளிவர படம்தான் விஸ்வாசம். இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளிவந்து பல விமர்சங்களை பெற்றிந்தாலும், அடுத்ததா வெளிவந்த மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்கள்கிட்டயும் நல்ல வரவேற்பு கிடைச்சது.

முக்கியமா யூ டூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த மோஷன் போஸ்டர் இதுவரை 96 லட்சம் பார்வைகளையும், 5 லட்சத்துக்கு மேல் லைக்ஸ்களையும் பெற்றிருக்கிறது. இதுபோக இதன்பிறகு வெளிவந்த பர்ஸ்ட் சிங்கள் ‘அடிச்சி துக்கு’ மற்றும் இரண்டாவது சிங்கிளான ‘வேட்டிக்கட்டு’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பில் இருந்த நேரத்தில் நேற்று விஸ்வாசம் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வெளியிட்டுருந்தாங்க.

வெளிவந்த எல்லா பாடலும் மக்கள் மற்றும் ரசிகர்கள்கிட்ட நல்ல வரவேற்பில் இருப்பதால், அடுத்ததா வர இருக்கும் டீசர்காக ரசிகர்கள் ஆவலா காத்திட்டு இருக்காங்கன்னுதான் சொல்லணும்.

அதுக்கேத்த மாதிரி விஸ்வாசம் டீசர் கிறிஸ்துமஸ்க்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாயிருக்கிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here