எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? – ராதாரவி காட்டம்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வருகின்ற கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார் நடிகர் ராதாரவி.

அவர் பேசிய அந்த விடியோவை ட்விட்டரில் பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதனை பார்த்த பலரும் நடிகர் ராதாரவி மீது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள். இந்த ஒரு விசயத்தினால் திமுக கட்சிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் நடிகர் ராதாரவி.

இதற்கு நடிகை நயன்தாராவும் கடுமையான கண்டனத்துடன் கூடிய ஒரு அறிக்கையை வெளிட்டு தன்னுடைய பதிலடியை கொடுத்திருந்தார். இந்த நிலையில், எனக்கு இன்னோரு முகம் இருக்கு என்ற குறும்படம் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த குறும்படம் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி சிங்கம் எப்போதும் கர்ஜிக்கும், ஆனால் அதற்காக பயந்துவிடாதீர்கள்.

பயம் என்ற ஒன்று எங்களுடைய குடும்பத்திற்கே கிடையாது. ஆகையால் எதுக்காக பயப்பட வேண்டும். ஒரு சில நீ நடிப்பதையே நிறுத்துவேன் என்கிறார்கள். அனால் அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார்.

குறிப்பாக கொலையுதிர்காலம் பிரச்சனையில் நான் பேசியது உங்களில் யாரையாவது புண்படுத்திருந்தால், அதற்கு மனவருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியதுமட்டுமில்லாமல், மன்னிப்பு கேட்பது என்பது என்னுடைய பரம்பரைக்கே கிடையாது என்றும் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நான் என்ன கொலை குற்றமா பண்ணிவிட்டேன் என்று பேசியுள்ளார் நடிகர் ராதாரவி.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here