குடிமகன் திரைவிமர்சனம்

ஜீவமலர் சத்தீஸ்வரன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் சத்தீஸ்வரன் இயக்கத்தில் ஜெய்குமார், ஜெனிபர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள குடிமகன் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதைக்களம் :

அதிக பொருட்செலவில் படத்தை எடுக்காமல் சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையை உருவாக்கிய இயக்கிய இயக்குனர் சத்தீஸ்வரனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளலாம்.

ஒரு அழகிய விவசாய கிராமம், அந்த ஊரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில்தான் டாஸ்மாக் கடை உள்ளது. திடீர்ரென்று அந்த ஊரில் உள்ள கவுன்சலர் ஏற்பாட்டில் டாஸ்மாக் கடை ஊருக்குள்ளே வருகிறது. இந்த படத்தின் கதாநாயகன் ஜெய்குமாரை ஒரு முறை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார்கள் அவர்களது நண்பர்கள், இதனால் கொஞ்சம் கொஞ்சமாக முழு குடிகாரனாகிறார் ஜெய்குமார். இதனால் இவருடைய குடும்பம் எந்த நிலைமைக்கு மாறிப்போகிறது, கூடவே இந்த ஊரும் எப்படிமாரி போகிறது என்பதை தெளிவாக காட்டியுள்ளார்.

நடிப்பு :

நாயகன் ஜெய்குமார் நடிப்பில் இன்னும் தேறவேண்டும். படத்தில் குடிப்பதற்க்கு முன்பை இருந்தைதை விட குடிப்பழக்கத்துக்கு ஆளான பிறகு தட்டு தடுமாறி நடிக்கின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை ஜெனிபர் தனது கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் நடித்ததில் ஜெய்குமாருக்கு வராத நடிப்பை ஈடு செய்கிறார். குறிப்பாக இவர்களுக்கு மகனாக நடித்திருக்கும் ஆகாஷ் குடிக்கு அடிமையான தன் அப்பாவை வெறுக்கும் காட்சிகள் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களை தவிர இந்த படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரமும் மிக அருமையான நடிப்பை வெளிக்கொணர்த்துள்ளனர்.

படத்தை பற்றிய அலசல் :
தமிழ்நாட்டிற்கு தேவையான ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் காமெடி என்ற பெயரில் வைத்திருக்கும் டீக்கடை காட்சிகள் மற்றும் இன்னும் சில அலுப்பு தட்டும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். முக்கியமாக திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு வேண்டும். படம் பார்க்கும் போது ஒரு குறும்படம் உணர்வை அவ்வப்போது தந்தாலும் அதை எல்லாவற்றையும் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் காப்பாற்றுகிறார்கள்.

இசை :

பிரசாந்தின் பின்னணி இசை இந்த படத்திற்க்கு ஏற்கும் ரகம் தான். இவரை போலவே அருள் செல்வனின் ஒளிப்பதிவில் குடிமகன் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கிராமத்தின் அழகு மிளிர்கிறது.

இயக்கம் :

மொத்தத்தில் குடி பழக்கத்தால் அழிந்து வரும் தமிழ்நாட்டிற்கு பொருத்தமான, தேவையான கதையாக இருந்தாலும், குடி பழக்கம் உள்ளவர்களில் ஒரு சிலர் இந்த படத்தை பார்த்து திருந்தினால் இந்த படகுழுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்லலாம்.

தம்ப்ஸ் அப் :

1. கதை
2. சமுக கருத்து

பல்ப்ஸ்:

திரைக்கதையில் அழுத்தம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *