“கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சிக்காக 2கோடி செலவு

சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து  நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறார்கள் . ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.

இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து, படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதிலும் இருந்து நிஜ பெண் கபடி வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள், என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைYashika Aannand’s Zombie Movie Stills
அடுத்த கட்டுரைசிவகார்த்திகேயனின் ‘SK15’ “ஹீரோ” ‘HERO’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here