சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார்.

தி வேர்ல்டு பெஸ்ட் நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளில் இருந்தும் தனி நபர்கள் மற்றும் குழுவினர் கலந்துகொண்டனர். இதில் சென்னையில் இருந்து பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்துகொண்டு தன் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடுவர்களாக வீற்றிருந்த இதன் இறுதி நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 2 பியானோக்களை வாசித்த லிடியன் நாதஸ்வரம், ஒரு கையால் மிஷன் இம்பாசிபிள் தீம், மறு கையால் ஹாரிபாட்டர் தீம் வாசித்தும், கைகளை பின்பக்கம் திருப்பியபடி பியானோ வாசித்தும், கலைஞர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.  இவருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டு 1 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்ப்பட்டன.

அதன் பிறகு எலன் ஷோ உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் லிடியன் கலந்துகொண்டார். இவருக்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்,  நடிகர் மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் லிடியனின் வீட்டுக்குச் சென்று வாழ்த்தியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் லிடியன் என்னவளே பாடலை பியானோவில் வாசித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *