செல்வராகவனின் NGK ஒரு பார்வை

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் முதல்முறையாக வெளிவந்திருக்கும் படம்தான் என் ஜி கே.

கதைக்களம்
சூர்யா படித்த ஊரில் செல்வாக்கு மற்றும் நாட்டுப்பற்று உள்ள ஒரு விவசாயி. கெமிக்கல் உரத்தால் வர விளைவுகள் பற்றி ஊர் மக்களிடம் சொல்லும்போது அங்கே உள்ள கந்துவட்டிகாரர்கள் பிரச்சனை செய்து விளை நிலத்தை நாசம் செய்கிறார்கள். இதனை தடுக்க எம் ல் எ விடம் போகும்போது எதிர்பாராவிதமாக அரசியலில் நுழைக்கிறார் குமரனாகிய சூர்யா. இதன் பிறகு கட்சியில் முன்னேறி , தான் நினைத்ததை அடைந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

சூர்யா:
இதுவரை பார்த்திடாத சூர்யாவின் நடிப்பில் புது ரகம். ஏனென்றால் காதல், ஆக்ஷ்ன், என்று பல பிரிவுகளில் நடிப்பை தந்த சூர்யா இந்த படத்தில் சற்று வித்தியசமான கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார்.

சாய் பல்லவி & ரகுல் ப்ரீத் சிங் :
சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். நம்மையும் ரசிக்க வைத்துள்ளார். குறிப்பாக தன் கணவனான சூர்யாவை சென்ட் வாசனை மோப்பம் பிடித்து சந்தேகப்படுவது என வருகின்ற எல்லா இடத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இதுபோக ரகுல் ப்ரீத் சிங்க் மற்றும் சாய் பல்லவி இடையிலான காட்சிகள் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

ரகுலின் முக்கிய வேலை இந்த படத்தில் கார்பரேட் கம்பெனி மூலம் அரசியல்வாதிகளுக்கு, சமூக வலைத்தளங்கள் மூலம்
மக்களிடம் நல்ல பெயரையும், வரவேற்ப்பையும் பெற்று தருவதுதான். அப்படி அரசியல் ரீதியாக ஒரு முறை
சூர்யாவை பார்க்க செல்லும் ரகுல் அவரை கண்டதும் காதலில் விழுகிறார்.

மற்ற கதாபத்திரங்கள்:
என் ஜி கே படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களான இளவரசு, தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், தலைவாசல் விஜய் மற்றும் பலர் படத்துக்கு தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் பலத்தை சேர்த்துள்ளனர்.

படத்தை பற்றிய அலசல்:
விவசாயியாக நடித்திருக்கும் சூர்யா பல இடங்களில் கண்களை கொண்டே பதில் சொல்கிறார். ஒரு இளைஞன் அரசியலுக்கு வர நினைத்தால் இந்த அரசியல்வாதி கூட்டம் எப்படி தகர்கிறது. இதெல்லாம் நடக்கும் என்ற நோக்கத்தில்தான் இளைஞர்கள் பலரும் அரசியலுக்கு வர தயங்குகிறார்கள் என்பதை எதார்த்தமாக படத்தில் சொல்லிவிட்டார் இயக்குனர் செல்வராகவன். என்னதான் படத்தின் கரு, யுவனின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று எல்லாவற்றும் நன்றாக இருந்தாலும் செல்வராகவன் படமா இது? என்ற கேள்வி படம் பார்க்கும் பல இடங்களில் நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. மற்றபடி செல்வராகவன் ஸ்டைலில் ஒளிப்பதிவு, இசை என சில விஷயங்கள் நமக்கு தென்படுகிறது. என் ஜி கே படத்தின் முதல் பாதி ஆமை வேகத்திலும், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகவும் உள்ளது.

படத்தின் பல காட்சிகள் இன்றைய சமூகத்தில் அரசியலில் இருக்கும் பல ஓட்டைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று அப்பட்டமாக காட்டியுள்ளது.

மொத்தத்தில் பொறுமை உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் பொறுமையோடு பார்க்கக்கூடிய சமூக கருத்துள்ள படம் இந்த என் ஜி கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *