தாங்குமா தமிழகம் ?

காரோனோ கிருமி பாதிப்பால் மக்கள் அனைவரும் 50நாளைக்கு மேல் வீட்டில் முடங்கியுள்ளனர்.  தற்போது தமிழகம் மூன்றாம் கட்ட ஊரடங்கை சந்தித்து வருகின்ற இந்தநிலையில் அரசு மதுபான கடைகளை துறந்துவிட்டு குடிமகன்களை குஷிப்படுத்துவது நியாயமா என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார் ??

இது குறித்து மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்  “மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்? என்று கேட்டுள்ளார் !!

இதற்கு தமிழக அரசு கண்டிப்பாக பதில் சொல்லியாகவேண்டும் என கமல்ஹாசன் ரசிகர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  மேலும் டாஸ்மாக் கடைககள் துரந்தமைக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தலைவர் விஜயகாந்த் தங்களது கண்டங்களையும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *