பரியேறும் பெருமாளுக்கு புதுச்சேரி அரசு விருது

நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்ததுதான் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை தொட்டது. குறிப்பாக இத்திரைப்படத்திற்கு உள்ளுர் விருது முதல் தேசிய விருது வரை பெரும் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில், அதெல்லாம் பொய்யாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

முக்கியமாக சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட தேசிய விருது பட்டியலில் பரியேறும் பெருமாள் படம் சிறந்த படத்திற்கான, நடிகருக்கான விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்த்ததில் எல்லாம் வெறும் ஏமாற்றம் என்றே ஆனது. அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் கடந்த வருடம் நிறைய நல்ல படங்கள் வெளியாகியிருந்தது. அதில் ஒன்றுக்கு கூட சிறந்த படத்திற்கான விருது கிடைக்காமல் இதுவரை நாம் பார்க்காத படமான பாரம் என்ற படத்திற்கு விருது கிடைத்திருந்தது. இது தமிழ் சினிமாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது என்றே சொல்லவேண்டும். இப்படி ‘பரியேறும் பெருமாள்’ எதிர்பார்த்த விருதை பெறவில்லை என்றாலும் தற்போது புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் திரைப்படவிழாவை நடத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான விருது கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கி கவுரவிக்கின்றார். இந்த திரைப்பட விழா நாளை மறுநாள் (13.09.19) மாலை 6 மணிக்கு தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கு விழா தொடங்க உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகரகீர்த்தன் (பெங்காலி), சூடானி ப்ரைம் நைஜீரியா (மலையாளம்), ராஷி (ஹிந்தி), ஆகிய படங்கள் சிறப்பு திரைப்படங்களாக திரையிடப்படுகிறது. வருகின்ற 17ம் தேதி வரை இத்திரைப்படவிழா நடக்க இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *