பூர்ணா என்னும் நான் !! – பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஷம்னா காசிம் மலையாளிகள் அறிந்த சுந்தர குட்டி,  தமிழர்களுக்கு தெரிந்த பூர்ணா. கடவுளின் சொந்த நாட்டில் பிறந்த தேவதை என்றாலும் மிகையாகாது. 23 மே 1989-ல் கண்ணூர்-ல் பிறந்தவர் தான் நடிகை, நடனகலைஞி பூர்ணா. சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். பரதநாட்டியம் என்னும் கலையை முறையாக பயின்று தொலைக்காட்சிகள் மூலம் பல மக்களுக்கு சென்றடைந்தார். பின் அசாதாரண திறமையாலும் தன்  அம்மா கொடுத்த நம்பிக்கையாலும் 2004-ல் மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற மலையாள படத்தில் முதல் முதலில் “தான்ய” என்ற கதாபாத்திரத்தில் தடம்  பதித்தார். பின் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க துவங்கினார். தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ மகாலக்ஷ்மி என்ற படத்தில் மகாலக்ஷ்மியாய் வளம் வந்தார். பின் 2008-ல் முனியாண்டி விலங்கியல் மூன்றாம்மாண்டு படத்தில் மாணவி மதுமிதாவாய் திரையிலும், பூர்ணாவாய் நிஜத்திலும் தமிழர்களுக்கு அறிமுகமானார். பின் தமிழிலும் தன் கலை பணியை தொடர்ந்தார்.

தீடிரென நடுவே கொஞ்சநாள் பூர்ணாவை தமிழ் சினிமாவில் காணவில்லை. “அவர் இனிமேல் நடிக்கமாட்டார்,  வாய்ப்பில்லை என்றெல்லாம், எல்லி நகையாட துவங்கினர்” பின் புறம் பேசிய வாய்களை எல்லாம் அடைக்கும் விதமாக மிஸ்கின், ராம் எனும் இரண்டு உலக சினிமா ஜாம்பவான்களோடு போட்டி போட்டு நடித்து தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தினர். ஆங்கிலத்தில் ஒரு வரி சொல்வார்கலே “Work in silence,Let  your success make noise” என்று அவ்வரிகளை  உண்மையாகும் வகையில் சவரகத்தி இசைவெளியீட்டு விழாவில் அமைந்திருந்தது பூரணாவை பார்த்து  மிஸ்கின் சொன்ன வார்த்தைகள்  இதை விட ஒரு நடிகை இயக்குனர் இடத்தில் என்ன பெயர் வாங்கிவிட முடியும். பின் கொடிவீரன்னில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்காக மொட்டை அடித்து கொண்ட நிகழ்வு இன்னும் அவரை உயர்த்தியது. அன்று முதல் இயக்குனர்களின் கதாநாயகி என்ற பெயரையும் பெற்றார்.  

இன்னும் எத்தனையோ சாதனைகள், எத்தனையோ அர்பணிப்புகள். கலைதாயின் சேவையில்  வெற்றிகரமாக 16ஆண்டுகளை கடந்து செல்லும் நாயகி.சின்னத்திரை, பெரிய திரை ஏன் இணைய திரை வரை கலக்கும் காலாகாரி. இன்னும் உங்கள்  சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் பூர்ணா,  இந்த பிறந்தநாள் இனிய பிறந்தநாளாக அமைய தமிழ்ப்படம் சார்பாக வாழ்த்துகிறோம் 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *