மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது.

மட்டுமல்லாமல் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி மேச்சேரி, மனித நேயர் வரதராஜன், ஊடகவியலாளர் சுமந்த்.சி.ராமன், போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை DVM சேவா பால நிறுவனர் இருளப்பன் மற்றும் குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here