முடியும் என்பதே மூலதனம் – தனுஷின் கதை

“பாக்க தான் ஒல்லி ஆனா அண்ணே கில்லி” – தனுஷ் தமிழ் சினிமாவின் பெருமை!! நடிகர் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் நிரூபித்துள்ளார். தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வெளியான இப்படம் இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதன் அர்த்தம், நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்து, 19-ஆம் ஆண்டில் நாளை அடி எடுத்து வைக்கிறார் என்பதாகும்.

இந்த மகிழ்ச்சியை, அவரது ரசிகர்கள் மற்றும் தொழில்துறை நண்பர்கள் இந்த நாளை பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, அனைவரும் சமூக விலகலில் இருப்பதால், அனைத்து கொண்டாட்டங்களையும் ஆன்லைனில் கட்டுப்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் ஒரு பொதுவான டி.பியுடன் (Common DP) அவர்கள் வரவுள்ளனர், தயாரிப்பாளர் தானு, இயக்குநர்கள் செல்வராகவன், பாலாஜி மோகன், துரை செந்தில்குமார், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன் மற்றும் நடிகர் பிரசன்னா ஆகியோரும் இதில் பங்கெடுக்கவுள்ளனர். மேலும், தனுஷின் சினிமா பயணத்தின் 18 ஆண்டுகளை குறிக்கும் சிறப்பு ஹேஷ்டேக்கும் பயன்படுத்தவுள்ளது.

கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ மற்றும் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’ ஆகிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்த தனுஷ், தற்போது கார்த்திக் சுப்புராக் இயக்கத்தில் தனுஷ் தனது அடுத்த படமான ‘ஜகமே தந்திரம்’ வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று முடிந்தவுடன் இப்படத்தின் ரிலீஸ் தேது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *