விஜய் ஒரு சமூக விரோதி?? – சாரு

தளபதி விஜயினுடைய 63 வது படைத்திற்க்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியானாலும், சர்கார் படத்தினுடைய விமர்சனம் அதிகமாயிக்கொண்டுதான் இருக்கிறது. சர்கார் படம் வெளியாவதற்கு முன்பும், பின்பும் பல சர்சைகளை பெற்று வரும் இந்நிலையில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா சர்கார் படத்தை விமர்சித்து சினிமா பிரபலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது.

எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியது என்னவென்றால் சமூக விரோதிகள் என்று சொல்வார்கள் அனால் நடிகர் விஜயோ தன்னை ஒரு கார்பொரேட் கிரிமினல் என கூறிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதிக சம்பளம் வாங்கி நடிக்கும் நடிகர் விஜய் இலவசத்தை எதிர்ப்பது சமூக விரோத செயல், சுத்த மடத்தனம் என்றும் மக்களை ஏமாற்றி தலைவர் ஆக நினைக்கிறார் என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா தெரிவித்திருக்கிறார்.

விமர்சனங்களுக்கு ஏற்றது போல் சர்கார் வெளியாகி 2 வாரங்கள் ஆன நிலையில், திரையரங்கில் பார்வையாளரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதை போக்கும் விதமாக சர்கார் படம் பார்க்க வரும் மக்களுக்கு ஸ்ரீமுருகன் திரையரங்கில் பாப்கார்ன் இலவசம் என்று போஸ்டர் ஒட்டிருக்கிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இலவசம் வேண்டாம் என்று சொல்லும் சர்கார் படத்துக்கு பாப்கார்ன் இலவசம் என அறிவித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது. இப்படி தளபதி விஜயினுடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வந்திருந்தும் சர்கார் படத்துக்கு இவ்வளவு விமர்சனம் வருவது எதிர்பார்க்காத ஒன்று என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *