100 படம் ஒரு பார்வை

படங்களுக்கு படம் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்தான் அதர்வா. இவர் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் 100 படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

கதைக்களம்
அதர்வா வேலைக்கு செல்லும் முதல் நாளே போலீஸ் ஸ்டேஷன்னில் வேலை கிடைக்காமல் கமிஷ்னர் அலுவலகத்தில் உள்ள கன்ட்ரோல் துறையில் வேலை கிடைக்கிறது. இஷ்டமில்லாமல் வேலை பார்க்கும் அதர்வாக்கு 100 வது அழைப்பாக ஒரு பெண் தொடர்ப்பு கொண்டு தன்னை கடத்தி விட்டதாக தெரிவிக்கிறாள். அந்த பெண்ணை கடத்தியது யாரு? எதனால் கடத்தினார்கள்? இதன் பின் இருக்கும் நபர்கள் யார்? என்றும் இறுதியாக கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

அதர்வா:
நடிகர் அதர்வா தொடர்ந்து வித்யாசமான கதைகளிலும், கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். அதே போல் நடிகர் அதர்வா நடித்திருக்கும் இந்த 100 படமும் வழக்கமான போலீஸ் கதை போல் இல்லாமல் மக்கள் ஆபத்துக்கு அழைக்கும் எண் 100 என்ற கன்ட்ரோல் துறையில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரியாக அதர்வா அற்புதமாக நடித்துள்ளார். இந்த 100 படம் அதர்வா சினிமா வாழக்கையில் மறக்க முடியாத திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் சொல்லாம்.

ஹன்சிகா மோத்வானி:
சினிமாவில் இடையில் காணாமல் போன நடிகைகளில் ஒருத்தர் ஹன்சிகா. மற்ற படங்களில் நடித்தது போல் இந்த படத்திலும் கதையில் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளார் என்பது கவலைக்குரியதே.

யோகிபாபு:
படம் முழுவதும் வரவில்லை என்றாலும் இவரின் காமெடி இந்த படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது. 100 படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களான ராதாரவி, ஆடுகளம் நரேன், என்று இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சாம் அன்டன்:
டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் சாம் அன்டன் இந்த படத்தில் மைய கருவை இதுவரை வந்த போலீஸ் படத்தில் இல்லாதது போல் தந்திருப்பதால் இந்த 100 படம் எக்காலத்திலும் தனித்து நிற்கும் என்பதை சந்தேகமில்லாமல் சொல்லலாம். 100 படம் மூலம் சாம் அன்டன் வெற்றி பெற்றுவிட்டார் என்று சொல்லலாம்.

படத்தை பற்றிய அலசல்:
படத்தின் கதையை தவிர மற்ற விஷயங்களை தெரிவித்தால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் ஆகையால் முடிந்தளவு படத்தை பற்றின அலசலை பார்ப்போம். 100 படத்தின் ஆரம்பத்தின் 20 நிமிடங்கள் கண்டவுடன் காதல் போன்ற விஷயங்கள் இருப்பதால் படத்தை ரசிக்கும் அளவு குறைக்கின்றது. அதேபோல் அதர்வாவும் ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுத்தது போன்ற உணர்வு ஏற்படுத்துகின்றது. அதற்கு பின்புதான் படத்தின் கதைக்குள் நம்மை கொண்டு செல்கின்றனர்.

100 படத்தின் மையக்கரு மற்ற படங்களில் சொன்னது போல் இருந்தாலும் தற்போது நடந்த பொள்ளாச்சி பிரச்சனையையும் சுட்டிக்காட்டியுள்ளது. தொழிநுட்பம் வளர்ந்த இந்த நாட்டில் இளைஞர்கள் எப்படி வளர்ச்சியடைந்து அதை தவறாக கையாள்கிறார்கள் என்பதை இந்த படத்தில் அருமையாக காட்சிப்டுத்தியுள்ளனர்.

மொத்தத்தில் 100 படம் சமூக விழிப்புணர்வுடன் எந்த இடத்திலும் ரசிகர்களை ஏமாற்றமால் கொடுத்திருக்கும் அதிரடி பொழுதுபோக்குக்கான படைப்புதான் என்று சொல்லலாம்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here