இயக்குனராகும் மலையாள நடிகர் மோகன் லால்

0
70

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருத்தராக திகழ்பவர்தான் மலையாள நடிகர் மோகன் லால். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லூசிபர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. முக்கியமாக 5 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பெருமை படக்கூடிய உயரிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் மோகன் லால்.

நடிப்பதில் மட்டுமே ஈடுபாடு கொண்ட இவர் தற்போது இயக்குனராகும் புது அவதாரத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளார். நடிகர் மோகன் லால் இயக்க இருக்கின்ற படத்தின் பெயர் “ப்ரோஸ் கார்டியன் ஆப் காமா’ஸ் ட்ரெஷர் ” என்று பெயரிடப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த படம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் பற்றிய மற்ற விவரங்களை கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக தனது பல்வேறு விதமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கண்டிப்பாக இயக்குனர் அவதாரம் எடுத்தும் மக்களை மகிழ்விப்பர் என்பதில் அச்சமின்றி சொல்லாம்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here