The Girl With a Bracelet, Review!!

18ஆவது சென்னை உலகதிரைப்பட விழா இனிதே சத்யம் திரையரங்கில் துவங்கியது. தமிழக அரசாங்கம் 75 லட்சம் நிதி உதிவி செய்திருப்பது திரை பிரியர்கள் இடத்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவிச்சி கல்லூரி மாணவர்களால் விழா இன்னும் சிறப்படைந்தது என்றாலும் மிகையாகாது. நிகழ்ச்சியை சுஹாசினி மணிரத்தினம் தொகுத்து வழங்க பல அயல்நாட்டு இயக்குனர்கள் மேடையில் அமர்ந்து நடப்பதை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

சரி விழாவின் முதல் துவக்கப்படமாக “The Girl with a Bracelet” என்ற ஜெர்மானிய திரைபடம் போடப்பட்டது. மொழி இடையூறு இருந்தாலும் ஆங்கில subtitle மனசிற்கு ஆறுதல் அளித்தது. lise தன் குடும்பத்துடன் கடற்கரையில் பொழுதை கழித்து கொண்டிருக்கிறாள், அப்போது தீடிரென காவல் துறை அங்கே வந்து அந்த பொண்ணை விசாரணைக்கு அழைத்து செல்ல கதை துவங்குகிறது.

Lise உடைய தோழி கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டிருப்பாள். அவள் கொலையில் சந்தேகம் எழுந்து போலீசார் Lise’ஐ விசாரணைக்கு அழைத்து செல்வார்கள், அங்கே துவங்கும் கதை. பின் யார் அந்த கொலையை செய்தார்கள், எதனால் lise தோழி யாரால் கொலைசெய்யப்பட்டால் என்பது படத்தின் மீதி கதை. படம் முழுவதும் நீதி மன்றத்தில் நடக்கும் வர்ணம் எடுத்திருப்பார்கள், இருந்தும் சுவாரஷியம் குறையாமல் இருக்கும். படத்தின் climax உச்சக்கட்டம், நம்மையும் மீறி கைகள் தட்ட வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *