30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் ஹாரர் படம் “பேச்சி”

வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர். பரந்தாமன் , விக்னேஷ் செல்வராஜன் , விஜய் கந்தசாமி தயாரிக்கும் படம் “பேச்சி” இப்படத்தை இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கவுள்ளார். மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற “பேச்சி” குறும்படத்தை முழுநீள திரைப்படமாக ராமச்சந்திரன் இயக்குகிறார்.

இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு பார்த்திபன் , கலை குமார் கங்கப்பன் , படத்தொகுப்பு இக்னேஷியஸ் அஸ்வின்.

இப்படத்தை படக்குழு அடர்ந்த காடுகள் கொண்ட வன பகுதிகளில் படமாக்கவுள்ளது. 30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக வன பகுதிகளில் படக்குழுவினர் படமாக்கவுள்ளனர். இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும். இப்படத்துக்காக இயக்குனர் பில்லி , சூனியம் பற்றி மிக நுணுக்கமாக அதிக நாட்கள் செலவழித்து ஆராய்ச்சி செய்து கதையை உருவாக்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு புதுமையான அட்வெஞ்சர் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர். இத்திரைப்படம் மக்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும்.

சமீபத்தில் இந்த படத்தின் first look Poster-யை நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். “பேச்சி” படத்தின் first look போஸ்டர் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

[Best_Wordpress_Gallery id=”150″ gal_title=”Pechi Movie Pooja”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *