4 தென்னிந்திய மொழிகளில் “குயின்” படம் ரீமேக்

0
18

தென்னிந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படும் பெருமையை கொண்ட படம் “குயின்”. இயக்குனர் விகாஸ் பஹ்ல் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்து எல்லோராலும் பாராட்டப்பட்டு, வெற்றியடைந்த படம்தான் “குயின்”. இந்த படம் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ், கன்னடம் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் ரீமேக் செய்கிறார். “பாரிஸ் பாரிஸ்”ன்னு தலைப்பு வைத்திருக்க தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்ககிறார். மற்றும் “பட்டர்பிளை” ங்கிற தலைப்பில் பருல் யாதவ் கன்னடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபோக “Zam Zam” ங்குற படத்தலைப்பில் மலையாளத்தில் டைரக்டர் நீலகண்டா இயக்கத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கிறார், தெலுங்கில் “That Is மஹாலக்ஷ்மி ” ங்கிற படத்தலைபோட பிரஷாந்த் சர்மா ரீமேக் செய்து தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னென்னா? கங்கனா ரனாவத் “குயின்” படத்தில் நடித்து மக்களுடைய மனதில் இடம் பிடித்தது மட்டுமில்லாமல் தனது நடிப்பின் திறமையால் எல்லோராலும் பேசப்பட்டு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனா ரனாவத்துக்கு இணையாக காஜல் அகர்வால், தமன்னா, மஞ்சிமா மோகன், பருல் யாதவ் என்று இவர்களுடைய நடிப்பு பேசப்படுமா என்பதை படம் திரைக்கு வந்த பிறகுதான் சொல்லமுடியும்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here