முத்துராம் சினிமாஸின் அதிரடியான அறிவிப்பு

0
25

திருநெல்வேலியில் பிரபல திரையரங்கான முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான அறிவிப்பில் ரஜினி ரசிகர்களையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சிப்படுத்தியுள்ளது.

இந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. ரசிகர்கள் அனைவரும் இந்த இரண்டு படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளியிட்ட அந்த அறிவிப்பில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்படும் எனவும் வேட்டி கட்டு, அடிச்சு தூக்கு ஆகிய பாடல்கள் இரு முறை திரையிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடல் மட்டும் இரண்டு முறை திரையிடப்படும் எனவும் முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here